ADDED : ஜன 04, 2026 07:38 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்க-ளாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் மத்துார், கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி - திருப்பத்துார் மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அள-விற்கு பனிப்பொழிவு காண்படுகிறது.
வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டும், முகப்பு விளக்கை எரிய விட்ட
வாறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை போச்சம்பள்ளி அடுத்த, புலியூர் ஏரிக்கரை பகுதியில், தர்மபுரியிலிருந்து வாணி-யம்பாடிக்கு சென்ற, ஹோண்டா கார், சாலை
தெரியாமல், ஏரியின் அருகிலுள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள், காயம் ஏதுமின்றி தப்பினர். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
