/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்த கார்
/
சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்த கார்
ADDED : டிச 14, 2025 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார், சோலைவனம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 44. இவரின் நண்பர்களான கெங்காவரத்தை சேர்ந்த கோவிந்தசாமி, 34, காட்டாகரம் கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு, 55. இவர்கள் மூவரும் நேற்று காலை, 10:00 மணிக்கு, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் சந்துாரிலிருந்து
காவேரிப்பட்டணம் சென்றபோது, வேடர்தட்டக்கல் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஈஸ்வரன், கோவிந்தசாமி,
சின்னகண்ணு ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

