/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி
/
ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி
ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி
ஓசூர் அருகே ஏரிக்குள் பாய்ந்த கார்; ஐ.டி., ஊழியர் உட்பட 3 பேர் பலி
ADDED : நவ 01, 2024 05:08 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே உமாசங்கர் நகரை சேர்ந்தவர் மகேஷ் 25. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரும் ஓசூர் லிண்டோ 25, மற்றும் சின்ன எலசகிரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான யோகேஸ்வரன் 25, ஆகியோரும் நண்பர்கள். மூவரும் நேற்று முன்தினம் இரவு வெங்கடாபுரத்தில் இருந்து பாகலுார் நோக்கி காரில் வந்தனர்.
லிண்டோ காரை ஓட்டினார். வெங்கடாபுரம் ஏரிக்கரையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் பாய்ந்தது.
கிரேன் வாயிலாக ஏரியில் மூழ்கிய கார் அதிலிருந்த மகேஷ், லிண்டோ ஆகியோரின் சடலங்களை நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு போலீசார் மீட்டனர். நேற்று காலை ஓசூர் தீயணைப்புத்துறையினர் வாயிலாக ஏரி நீரில் போலீசார் நீண்ட நேர தேடுதலுக்கு பின் யோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார்.