/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள சின்ன தள்ளப்பாடியை சேர்ந்தவர் ரவீந்திரன், 45, டாஸ்மாக் கடை விற்பனையாளர்; கடந்த, 29 மாலை, இவரது கடைக்கு கட்டமடுவு லோக்பிரசாத், 25, மிட்டப்பள்ளி ராம்குமார், 28, டேவிட், 32 ஆகிய 3 பேர் வந்தனர்.
அவர்கள் பணம் கொடுக்காமல், மது கேட்டுள்ளனர்; ரவீந்திரன் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த லோக்பிரசாத் உள்ளிட்ட, 3 பேரும், ரவீந்திரனை கையாலும், பீர் பாட்டிலாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ரவீந்திரன் சிங்காரப்பேட்டை போலீசில் அளித்த புகார் படி, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

