ADDED : மார் 30, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:பர்கூர்
தொகுதி, தி.மு.க., வேட்பாளராக மதியழகன் எம்.எல்.ஏ.,வை மீண்டும்
அக்கட்சி அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி ஐந்துரோடு
ரவுண்டானாவில், கிருஷ்ணகிரி மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம்
தலைமையில், அக்கட்சியினர், 30க்கும் மேற்பட்டோர் திரண்டு பட்டாசு
வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தேர்தல் விதிமுறைகளை
மீறியதாக அஸ்லம் மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட, தி.மு.க.,வினர்
மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
