/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஜகடை, கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே சமத்துவபுரம் பகுதியில், மாரியம்மன் கோவில் நிலம் அருகே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இது தொடர்பாக, மகாராஜகடை ஸ்டேஷன் எஸ்.ஐ., நடராஜ் புகார் செய்தார். அதன்படி, விழாவை முன்நின்று நடத்தியதாக, பெத்தனப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், 48, கொட்டாவூரை சேர்ந்த ராமகிருஷ்ணன், 45, லட்சுமணன், 40, ஆகிய, 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

