/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 29, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி:
குருபரப்பள்ளி அடுத்த சாமந்தமலையில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த சாமந்தமலையை சேர்ந்த நரசிம்மன், 42, நீலகண்டன், 63, ஜெயராமன், 63, அர்ஜூணன், 68, சின்னதம்பி, 22 ஆகிய, 5 பேர் மீது, வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டையில், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் எருது விடும் விழா, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது. அதனால், ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நெடுஞ்செழியன் புகார் படி, தோட்டம் பகுதியை சேர்ந்த முனிராஜ், 48, கிருஷ்ணன், 61, ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்
பதிந்துள்ளனர்.

