/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வயிற்றில் இறந்த கருவுடன் சுற்றிய சிறுமி போலி ஆதார் கார்டு தயாரித்தவர் மீது வழக்கு
/
வயிற்றில் இறந்த கருவுடன் சுற்றிய சிறுமி போலி ஆதார் கார்டு தயாரித்தவர் மீது வழக்கு
வயிற்றில் இறந்த கருவுடன் சுற்றிய சிறுமி போலி ஆதார் கார்டு தயாரித்தவர் மீது வழக்கு
வயிற்றில் இறந்த கருவுடன் சுற்றிய சிறுமி போலி ஆதார் கார்டு தயாரித்தவர் மீது வழக்கு
ADDED : ஆக 21, 2025 02:31 AM
கெலமங்கலம், கெலமங்கலம் அருகே, குழந்தை திருமணத்தால் கர்ப்பமடைந்த சிறுமி, வயிற்றில் இறந்த கருவுடன் ஒரு வாரம் சுற்றித்திரிந்துள்ளார். அவருக்கு குழந்தை திருமணம் நடந்ததை மறைக்க, போலி ஆதார் கார்டு தயார் செய்து கொடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே வசிப்பவர், 15 வயது சிறுமி. இவருக்கு திருமணமாகி, ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம், 21ம் தேதி, நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். தனக்கு, 20 வயதானதாக கூறி பரிசோதனை செய்தார். கடந்த, 12ம் தேதி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்ய அவரின் ஆதார் கார்டை, செவிலியர் பெற்றார். அதை ஆன்லைனில் பதிவு செய்தபோது, சிறுமியின், உண்மையான பிறந்த தேதி, 2010 என்பதும், அஜித் என்பவருடன் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததையும் டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த, 13ம் தேதி ஸ்கேன் செய்த போது, சிறுமியின் வயிற்றில், இதய துடிப்பு இல்லாமல் கரு இருப்பது தெரிந்தது.
அதனால், கருகலைப்பு செய்ய டாக்டர்கள் கூறினர். தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் செய்த ஸ்கேனிலும், கருவிற்கு உயிர் இல்லை என உறுதியானது. சிறுமி, ஒரு வாரமாக மருத்துவக் குழுவினர் கண்ணில் படாமல் இருந்தார். கெலமங்கலம் மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் சிறுமியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கருகலைப்பிற்கு அனுப்பினர்.
சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்தது தெரியாதவாறு, ஆதார் கார்டில், பிறந்த ஆண்டை மாற்றி, போலியான ஆதார் கார்டு தயார் செய்து கொடுத்த, கெலமங்கலத்திலுள்ள டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் மீது, நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மாரியப்பன் புகார் படி, கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

