/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு
/
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு
ADDED : நவ 08, 2024 02:43 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பெரியார் நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம், 57; கொம்மம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்.
இவரது மனைவி அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக சித்ரா, 39, பணிபுரிகிறார்.
இவரிடம் சச்சிதானந்தம் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
கடந்த மாதம், 29ல் பணியில் இருந்த சித்ராவை, மொபைல்போனில் அழைத்த சச்சிதானந்தம், 'மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதால், வீட்டுக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளார். அதே நாளில், அவரது மனைவியான தலைமை ஆசிரியை பணிக்கு வந்திருந்தார்.
சந்தேகமடைந்த சித்ரா, தன் கணவரிடம் கூறியுள்ளார். அவர், 'சச்சிதானந்தம் வீட்டிற்கு சென்று என்னுடன் போன் மொபைல் போன் இணைப்பில் இருக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
சித்ரா அப்படியே நடக்க, இது தெரியாத சச்சிதானந்தம், சித்ராவிடம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அவரிடமிருந்து தப்பிய சித்ரா, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார், சச்சிதானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.