/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்
/
மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்
மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்
மரம் வெட்டியோர் மீது வழக்கு லாரி, பொக்லைன் பறிமுதல்
ADDED : டிச 23, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த பெரியபொம்பட்டியில், சாலையோரம் இருந்த புளிய மரத்தை, சிலர் வெட்டி கடத்துவதாக நேற்று முன்தினம் தகவல் வந்தது.
இதையடுத்து, நொச்சிப்பட்டி வி.ஏ.ஓ., உமாதேவி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் அங்கு சென்றனர். அங்கு சிலர், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தை வெட்டி, பொக்லைன் உதவியுடன் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்து உமாதேவி புகார் படி, அங்கு வந்த ஊத்தங்கரை போலீசார், லாரி, பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர். புளியமரத்தை வெட்டி கடத்திய, அதே பகுதியை சேர்ந்த தங்கம், 56, ராஜா, 60, பூபதி, 51 ஆகிய மூவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.