ADDED : ஜூலை 08, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை
அடுத்த கல்குமரம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 42. இவரை கொலை
முயற்சி வழக்கில், போச்சம்பள்ளி போலீசார் கடந்த, 2016ல், கைது செய்தனர்.
அதேபோல ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியை சேர்ந்தவர்
பாரதிராஜா, 28. இவரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் ஊத்தங்கரை
போலீசார் கடந்த, 2019ல், கைது செய்தனர்.இருவரும் ஜாமினில் வெளிவந்த
நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. போச்சம்பள்ளி,
ஊத்தங்கரை நீதிமன்றங்கள் அளித்த புகார் படி, போச்சம்பள்ளி போலீசார்,
மணிகண்டன் மீதும், ஊத்தங்கரை போலீசார் பாரதிராஜா மீதும்,
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
