/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1,000 கோடி அமுக்கியது யார் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
/
ரூ.1,000 கோடி அமுக்கியது யார் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
ரூ.1,000 கோடி அமுக்கியது யார் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
ரூ.1,000 கோடி அமுக்கியது யார் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 03, 2025 02:17 AM

பர்கூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில், 'டாஸ்மாக் ஊழல் - 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1,000 கோடி ரூபாய் அமுக்கியது யார்?' என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
பர்கூர் வி.ஏ.ஓ., ரமேஷ், போலீசில் புகாரளித்தார். போஸ்டர் ஒட்டியதாக, பா.ஜ., ஆதிதிராவிடர் பிரிவு மண்டல பொதுச்செயலர் மயில்வேலன், 45, ஒன்றிய தலைவர் முருகன், 51, ஆகியோர் மீது, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முன், மேம்பாலம் அருகே, போஸ்டர் ஒட்டியதாக பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., டேனியல் அளித்த புகார் படி, பா.ஜ., வட்டத்தலைவர் கங்கா முருகன், 48, என்பவர் மீது, கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.