ADDED : ஜூன் 28, 2026 03:39 AM
தேன்கனிக்கோட்டை; சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில், மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த போலகொள்ளை கிராமத்தில் பொதுமக்கள் சேர்ந்து, அப்பகுதியில் மண் சாலை அமைக்க முயன்றனர். அதற்கு அப்-பகுதியை சேர்ந்த சந்திரம்மா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு வந்த சந்திரம்மாவின் உறவினர் பசப்பா, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மண்சாலை அமைக்கும் இடத்தில், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுள்ளார். இதையடுத்து சந்-திரம்மா, சஞ்சீவன் என்ற ரியல் எஸ்டேட் நடத்து-பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த சஞ்சீவன், மண் சாலையெல்லாம் போடக்
கூடாது என பிரச்னையில் ஈடு
பட்டுள்ளார். இதை தட்டி கேட்ட சித்தராஜ், 24, என்பவரை கற்களால் அடித்துள்ளனர்.
இதில் அவரது கழுத்து, காது, பகுதியில் காயம் ஏற்பட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தராஜ் புகார் படி அவரை
தாக்கிய சஞ்சீவன், மஞ்சு, ஆனந்த் ஆகிய மூவர் மீது வழக்குபதிந்து, அவர்களை தேன்கனிக்-கோட்டை போலீசார் தேடி
வருகின்றனர்.
