/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் :உலக காசநோய் தினம்
/
காவேரிப்பட்டணம் :உலக காசநோய் தினம்
ADDED : மார் 28, 2024 02:29 AM
கிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம்
சுவார்டு தொண்டு நிறுவன அலுவலகத்தில், மாவட்ட காசநோய் தடுப்பு நல
கூட்டமைப்பு, காச நோயினால் குணமடைந்தோர் கூட்டமைப்பு மற்றும்
சுவார்டு தொண்டு நிறுவனம் இணைந்து, உலக காச நோய் தினம்
கடைபிடிக்கப்பட்டது. சுவார்டு தொண்டு நிறுவன தலைவர் மற்றும் அகரம்
பஞ்., தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். காவேரிப்பட்டணம் அரசு
மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், காச நோயினால்
ஏற்படும் விளைவுகள் மற்றும் சத்தான உணவு உண்பது பற்றி கூறினார்.
வழக்கறிஞர்
ஷபிக் அகமத், காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவி
குறித்து விளக்கம் அளித்தார். ரீச் அக்ஷயா திட்ட மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நோயாளிகளுக்கான உரிமைகள்,
கடமைகள் குறித்து பேசினார். முன்னதாக, மாவட்ட காசநோய் தடுப்பு
கூட்டமைப்பு செயலாளர் மற்றும் சுவார்டு தொண்டு நிறுவன இயக்குனர்
ஜலாலுதீன் வரவேற்றார். காச நோயினால் குணமடைந்தோர் கூட்டமைப்பின் செயலாளர் ரஞ்சனி நன்றி கூறினார்.