/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு
/
ஆட்டோவில் மயங்கிய சிமென்ட் கடைக்காரர் சாவு
ADDED : செப் 30, 2025 01:56 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பாலாஜி நகர் ஏ.வி.எஸ்., லே அவுட்டை சேர்ந்தவர் சிங்காரவேலு, 33. சின்ன பென்னங்கூரில் சிமென்ட் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, மதுரை விபூதி சித்தரை பார்த்து விட்டு வருவதாக கூறி புறப்பட்டார். மதியம், 12:50 மணிக்கு, சிங்காரவேலுக்கு அவரது மனைவி அஞ்சலி, 24, போன் செய்த போது, தனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்தவுடன் ஆட்டோவில் சென்று பார்த்த போது, சிங்காரவேலு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.