தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/'அனைவருக்கும் ஏற்ற மத்திய பட்ஜெட்'

'அனைவருக்கும் ஏற்ற மத்திய பட்ஜெட்'

'அனைவருக்கும் ஏற்ற மத்திய பட்ஜெட்'


ADDED : பிப் 02, 2024 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: ''இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரும் ஏற்ற பட்ஜெட்,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறினார்.

இது குறித்து அவர் நேற்று, கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால நிதிநிலை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளார். அதில், கடந்த ஆண்டில், 25 கோடி ஏழை மக்களை, ஏழைகள் என்ற நிலையில் இருந்து உயர்த்தி இருப்பதாகவும், 34 லட்சம் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்திருப்பதாகவும், பி.எம்., கிசான் திட்டத்தில் இதுவரை, 12 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவி செய்திருப்பதாகவும், கல்வியை மேம்படுத்த, 3,000 ஐ.டி.ஐ., 7 ஐ.டி., 16 ஐ.ஐ.டி.,களையும், உருவாக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளை இணைக்கின்ற அளவுக்கு பல்வேறு நெடுஞ்சாலைகளையும் உருவாக்கி, ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு கொடுத்து, அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 3 கோடியை தாண்டி தற்போது, 5 கோடி வீடுகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும், 2070ம் ஆண்டில் இந்தியாவை ஒரு வலிமை மிக்க பொருளாதார, வளமான நாடாக உருவாக்குவதற்கு, அம்ரித்கான் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த, பட்ஜெட் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்றது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us