'மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சி'
'மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சி'
ADDED : ஏப் 13, 2026 03:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., கட்சியை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். இவர், தற்போது தீவிர-மாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ண-கிரி ஒன்றியத்தில், கங்கலேரி, மூங்கில்புதுார், மாதேப்பட்டி, செம்-படமுத்துார் மற்றும் அம்மனேரி கிராமத்தில், 'கை' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பெண்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் நான், 'கை' சின்னத்-திற்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கடந்த, 5 ஆண்டுகால, தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்-களை செயல்படுத்தி உள்ளார். அதேபோல், மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தபோது, காங்., மூத்த தலைவர் சோனியாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம். இந்த திட்டத்தின் பெயரிலுள்ள வேலை உறுதி திட்டம் என்பது, கீழ்மட்டத்தில் உள்ள அனைத்து பெண்க-ளுக்கும் உறுதியாக, 100 நாள் வேலை கிடைக்க வேண்டும் என்ப-துதான். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை, 9 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். இதற்கு ஆண்டுக்கு, 90,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மத்திய பா.ஜ., அரசு, 100 நாள் வேலைக்கு, 40,000 - 50,000 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்குவதால், மாநில அரசால் அனைவருக்கும் வேலை வழங்க முடியவில்லை. மேலும், மத்திய அரசு, 100 நாள் வேலைக்கான திட்டத்தை மாற்றி, மாநில அரசிடம் பணம் இருந்-தால்தான், 100 நாள் வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர். ஆனால் மக்களை முட்டாளாக்கும் விதமாக, 100 நாள் வேலையை, 125 நாளாக உயர்த்தி உள்ளோம் என்று ஏமாற்றி வருகின்றனர். எனவே, மக்கள் ஏமாற வேண்டாம். தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார். பின்னர், 100 வேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்த அவர் முயற்சி மேற்கொள்வார். எனவே, எனக்கு, 'கை' சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
