தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு


ADDED : மார் 18, 2026 08:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி:தமிழகத்தில் வரும் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் எவ்-வித அச்சமுமின்றி வாக்களிக்கும் வகையில், மத்துாரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையில், 64 பேர்கள் மற்றும் மத்துார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு தலைமையில், 30 போலீசார், கொடி அணிவ-குப்பு நடத்தினர். இது, தர்மபுரி செல்லும் மேம்பாலம் அருகில் தொடங்கி, சிவன் கோவில் வழியாக மத்துார் அரசு மேல்நி-லைப்பள்ளி வரை நடந்தது.

* ஊத்தங்கரையில், டி.எஸ்.பி., ராமமூர்த்தி தலைமையில், ஊத்-தங்கரை பஸ் ஸ்டாண்டில் துவங்கிய கொடி அணிவகுப்பு முக்-கிய வீதிகள் வழியாக சென்று, அரசு விளையாட்டு மைதானம் எதிரே நிறைவடைந்தது. இதில் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்-பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., மோகன் மற்றும் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us