ADDED : மார் 22, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், தனியார் ஜூவல்லரி மூலம், வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் 6 முதல், 10ம் வகுப்பு வரை கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் கவிதா வரவேற்றார். கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியருக்கு நினைவு பரிசுகள் மற்றும் பள்ளி நுாலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினார். பள்ளிக்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஒலிபெருக்கி ஆகியவை வழங்கப்பட்டன.

