தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிலம்ப பயிற்சி பெற்ற 125 பேருக்கு சான்று

சிலம்ப பயிற்சி பெற்ற 125 பேருக்கு சான்று

சிலம்ப பயிற்சி பெற்ற 125 பேருக்கு சான்று


ADDED : மே 25, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: ஒரு மாதம் சிலம்ப பயிற்சி முடித்தவர்களுக்கு, நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிலம்பாலயா சிலம்ப கலைக்கூடம் மற்றும் பாரத் சிலம்பம் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட கிளையின் சார்பில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்கில், ஒரு மாதம் கோடைக்-கால சிலம்பம் பயிற்சி முகாம் நடந்தது. இதில், 125 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்க-ளுக்கு பயிற்சியாளர் கவுரி சங்கர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு நாளான நேற்று இம்மாணவ, மாணவியருக்கு, பல்வேறு சிலம்ப போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன.பரிசளிப்பு விழாவிற்கு, பாரத் சிலம்பம் சங்க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழர்களால் தோற்று விக்கப்பட்ட சிலம்ப கலை, 5,000 ஆண்டுகள் பழ-மையானது. அகத்தியர் வடிவமைத்த, 64 கலை-களில் சிலம்பமும் ஒன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சிலம்ப கலையை போற்றி வளர்த்-தார்கள். அரசு கல்லுாரிகளில் சேரவும், அரசு பணிகளில் சேரவும், விளையாட்டு பிரிவில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் இணைக்கப்-பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us