ADDED : ஏப் 26, 2026 05:14 AM
ஓசூர்:ஓசூரில் மாநில அளவிலான அல்லு அர்ஜூன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அகில இந்திய தலைவர் பன்னி வாசு, செயலாளர் சரண் சந்திர நாயுடு மற்றும் அல்லு அர்ஜூன் உதவியாளர்களான தர்மேந்திரன், அர்ஜூன், நிகில் ஆகியோர் பங்கேற்று, ரசிகர் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். மன்ற தமிழ்நாடு மாநில தலைவராக ராஜ்குமார், செயலாளராக ஓசூரை சேர்ந்த ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக சிவா, செயலாளராக செந்தில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், ரசிகர் மன்றம் சார்பில், தமிழகத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க, அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பது என, தீர்மானிக்கப்பட்டது.
