/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாற்றில் ரசாயன தண்ணீர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தென்பெண்ணையாற்றில் ரசாயன தண்ணீர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
தென்பெண்ணையாற்றில் ரசாயன தண்ணீர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
தென்பெண்ணையாற்றில் ரசாயன தண்ணீர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 27, 2024 02:26 AM
ADDED : அக் 27, 2024 01:01 AM
ஓசூர், அக். 27-
ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை வரத்தான, 2,600 கன அடி நீரும் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் நேற்று, 7வது நாளாக தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ரசாயன நுரையால், கால்நடைகள், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பும், விளைநிலங்கள் பாழாகி வருவதாகவும், தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்யும் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை எனக்கூறி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கெலவரப்பள்ளி அணை எதிரே, தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தில் திரண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமை வகித்தார்.
இதில், கர்நாடகா அரசு, தென்பெண்ணையாற்றில் சுத்திகரிப்பு செய்து நீரை திறந்து விட வேண்டும். அதற்கு அம்மாநில அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும். இல்லா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், கர்நாடகா மாநில அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர்.
மகளிரணி மாநில செயலாளர் முத்துலட்சுமி, மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் வெங்கட்ராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் முனிராஜ், இளைஞரணி செயலாளர் விஸ்வநாத், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.