தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'

கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு 'கட்'


ADDED : மார் 31, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள, கொதுப்பள்ளி கிராமத்தில் செயல்-பட்டு வரும் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தால், சுகா-தார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்-பட்டது.

அப்போது, கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை, மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதும், தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகிலுள்ள ஓடைகளில் வெளியேற்றியதும் தெரிந்தது.இதையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு, மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us