sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்'

/

'வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்'

'வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்'

'வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்'


ADDED : மே 19, 2025 01:35 AM

Google News

ADDED : மே 19, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: ''தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடி-யாமல், முதல்வர் ஸ்டாலின் தத்தளிக்கிறார்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமி-ழக முதல்வர் ஸ்டாலினால், எதையெல்லாம் போராடி வெற்றி பெற முடியவில்லையோ, அதையெல்லாம் முன்நிறுத்தி அரசியல் செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்-கப்பட்டுள்ளதால், மக்களும் அமைதியாக வாழ முடியாத சூழ்-நிலை உள்ளது. அதையெல்லாம் திசை திருப்பத்தான், உணர்வு-களை துாண்டக்கூடிய கருத்துகளை சொல்லி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தப்பித்து கொள்ள முயற்சிக்கிறார். ஆரணி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டிற்கு, நான்கு ஆண்டுகளுக்கு பின், அதிகமாக சொத்துக்-களை சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையை, தி.மு.க., அரசு அனுப்பியுள்ளது. தி.மு.க., கொடுத்த, 520 வாக்குறுதிகளில் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியாமல், முதல்வர் ஸ்டாலின் தத்தளித்து கொண்-டிருக்கிறார். தன்னை காப்பாற்றி கொள்ளவும், மீண்டும் வெற்றி பெறவும், தேவையில்லாத கருத்துகளை முன்நிறுத்தி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

மசோதா ஒப்புதல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், ஜனாதிபதி தனக்கு எழுந்த சந்தேகங்களை, உச்சநீதி-மன்ற நீதிபதிகளுக்கு வினாவாக வைத்துள்ளார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களா என எதிர்பார்க்காமலேயே, முதல்வர் ஸ்டாலின், இதிலும் அரசியல் செய்ய ஆசைப்படு-கிறார். நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின் ஏமாறுவார்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us