ADDED : மே 19, 2026 02:31 AM
ஊத்தங்கரை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, ஆலப்பாடியை சேர்ந்த தம்பதி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சென்னப்பநாயக்கனுாரில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 22, மற்றும் அவரின் தாய் மகாலட்சுமி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுமியும் காத-லித்து, கடந்த, 6 மாதத்திற்கு முன், திருமணம் செய்து கொண்-டனர். இந்நிலையில் அச்சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என நேற்று முன்தினம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இது குறித்த புகாரின் படி ஊத்தங்கரை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்-மதி,
போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
