/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெயிலின் தாக்கத்தால் ஆற்றில் குளித்து மகிழும் சிறுவர்கள்
/
வெயிலின் தாக்கத்தால் ஆற்றில் குளித்து மகிழும் சிறுவர்கள்
வெயிலின் தாக்கத்தால் ஆற்றில் குளித்து மகிழும் சிறுவர்கள்
வெயிலின் தாக்கத்தால் ஆற்றில் குளித்து மகிழும் சிறுவர்கள்
ADDED : ஏப் 19, 2025 01:47 AM
போச்சம்பள்ளி:
தமிழகத்தில் நேற்று முதல் கோடை வெயிலின் தாக்கத்தால் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. நேற்று முதல்
பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய நிலையில் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குளம், ஆறு, ஏரிகளில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்கின்றனர்.
நேற்று மாதம்பதி ஆற்றில் சிறுவர்கள் தங்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில் பாதுகாப்பிற்காக ஐந்து லிட்டர் காலி பிளாஸ்டிக் கேன்களை தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு குளித்து மகிழ்ந்தனர். போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி குளம், குட்டை, ஆறு மற்றும் ஏரிகளில் ஆபத்தை உணராமல் குளிக்கும் மாணவர்களுக்கு அரசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வெண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

