/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
/
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2024 02:24 AM
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
குழந்தைகள் தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, நவ. 15-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மாணவிகளுக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து நேருவின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி லோகோவை எம்.எல்.ஏ., வெளியிட, மாணவியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெற்றுக் கொண்டனர். பெற்றோர் சங்க தலைவர் நவாப், 2,888 மாணவியருக்கு இனிப்பு வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாணவியருக்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்தினர். முதல் மதிப்பெண் பெற்ற, மன்ற செயல்பாட்டில் சிறந்து விளங்கிய, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.
* ஊத்தங்கரை அடுத்த, கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் வீரமணி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு குழந்தைகள் தின விழாவையொட்டி அனுப்பிய வாழ்த்து செய்தியை வாசித்து காண்பித்தார். மேலும் நேருவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் திரையிடப்பட்டு மாணவர்களுக்கு விளக்க உரையும் அளிக்கப்பட்டது. நேருவின் முகமூடியை அணிந்தவாறு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.