/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
ADDED : செப் 09, 2025 01:58 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில், மிளகாய் வத்தல் யாகம் நடப்பது வழக்கம். ஆவணி மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் இரவு, ராகு, கேது மற்றும் மூலவர் அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி மற்றும் காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.
முன்னதாக, மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி விலக வேண்டி, மிளகாய் வத்தலை உடலில் தடவி, யாக குண்டத்தில் பக்தர்கள் போட்டு வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் உட்பட, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.