ADDED : ஏப் 03, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் உள்ள, ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகண்ட யாகத்தில் வேள்வி தீ வளர்க்கப்பட்டு, மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, தங்கள் கைகளில் மிளகாய் வத்தலை ஏந்தி, தங்களது திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்க வேண்டி, தலையை சுற்றி யாக குண்டத்தில் போட்டனர். அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
