/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எரிந்த நிலையில் வாலிபர் சடலம் சூளகிரி போலீசார் விசாரணை
/
எரிந்த நிலையில் வாலிபர் சடலம் சூளகிரி போலீசார் விசாரணை
எரிந்த நிலையில் வாலிபர் சடலம் சூளகிரி போலீசார் விசாரணை
எரிந்த நிலையில் வாலிபர் சடலம் சூளகிரி போலீசார் விசாரணை
ADDED : மே 28, 2024 09:16 AM
ஓசூர்: சூளகிரி அருகே, எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியில், தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று எரிந்த நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, எரிந்து கிடந்த வாலிபர், சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், 23, என்பதும், கிரானைட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. நேற்று முன்தினம் மாலை தேவராஜ், பெட்ரோல் பங்க்கில் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியது, அங்கிருந்த, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பெட்ரோல் பங்க்கில் இருந்து, சற்று தொலைவில் உடல் கருகிய நிலையில் நேற்று தேவராஜ் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரத்தக்கறை உள்ளது. அதனால், அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சூளகிரி போலீசார், விசாரிக்கின்றனர்.