ADDED : செப் 20, 2026 03:12 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் தினமும், 135 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மக்கும், மக்காத குப்பை என இரு வகைகளாக, மாநகராட்சி துாய்மை பணியா-ளர்கள் பிரித்து வாங்கி வந்தனர். கடந்த ஏப்., 1 முதல், ஈர கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என, நான்கு வகைக-ளாக பிரித்து வழங்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால், கெட்டுப்போன காய்கறி, பழங்கள் போன்-றவை ஈர கழிவுகள், பிளாஸ்டிக், காகிதம் போன்றவற்றை உலர் கழிவுகள், நாப்கின் போன்றவை சுகாதார கழிவுகள், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை சிறப்பு கழிவுகள் என பிரிக்கப்பட்டுள்ளன.
அதனால், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை, தங்களது குப்பையை, 4 வகைகளாக பிரித்து தர வேண்டும் என்-பதை வலியுறுத்தி, ஓசூர் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, ராமநா-யக்கன் ஏரிக்கரை, பூ மார்க்கெட், அசோக் பில்லர் சர்க்கிள் ஆகிய, 5 இடங்களில், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மூக்கண்டப்-பள்ளி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாண-வியர் மற்றும் அனுகிரகா டான்ஸ் அகாடமி மாணவியர் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.ஓசூர் மாநகராட்சியிலுள்ள அனைத்து முக்கிய சாலைகளில், வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ள இருப்பதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை, மாநகர நல அலுவலர் அஜிதா தலைமையில், துப்-புரவு ஆய்வாளர்கள் ரமேஷ், மோகன், மேற்பார்வையாளர் சுரேஷ் உட்பட பலர் செய்திருந்தனர்.
