தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி மந்தம்: மரத்தடியில் மாணவர்கள்

வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி மந்தம்: மரத்தடியில் மாணவர்கள்

வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி மந்தம்: மரத்தடியில் மாணவர்கள்


ADDED : ஜன 06, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 07:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அருளாளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்-றிய துவக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 24 மாணவ, மாண-வியர் படிக்கின்றனர். பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் இல்லை. மாணவர்கள் குடிக்கவும், கழிவறைகளை பயன்படுத்தவும் தண்ணீர் வசதி இல்லை.

பள்ளி கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால், நிதி ஒதுக்-கப்பட்டு, வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி கடந்த, 6 மாதங்க-ளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் முடிக்கப்படாமல், மந்தகதியில் நடக்கிறது.

அதனால், வகுப்பறைகளுக்குள் அமர்ந்து படிக்க முடியாமல், மாணவ, மாணவியர் வரண்டாவிலும், மரத்தடியிலும் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். காம்பவுண்ட் சுவர் இல்லாததால், பள்ளிக்குள் சமூக விரோதிகள் நுழைந்து விடுகின்றனர். விஷ ஜந்துக்கள் நட-மாட்டம் உள்ளது.

பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தால், அதற்கு அடியில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாண-வியர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. வகுப்பறை கட்டுமான பணியை எப்போது முடிப்பீர்கள் என, ஒப்பந்ததார-ரிடம் பொதுமக்கள் கேட்கும் போதெல்லாம் வாக்குவாதம் ஏற்ப-டுகிறது.

எனவே, மாணவ, மாணவியர் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பணியை விரைந்து முடித்து, வகுப்பறைகளை ஒப்படைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us