/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு சார்பில் கட்டிகானப்பள்ளியில் துாய்மை பணி
/
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு சார்பில் கட்டிகானப்பள்ளியில் துாய்மை பணி
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு சார்பில் கட்டிகானப்பள்ளியில் துாய்மை பணி
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு சார்பில் கட்டிகானப்பள்ளியில் துாய்மை பணி
ADDED : அக் 05, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, 'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வஹாப் நகர், ராயக்கோட்டை சாலை ஹவுசிங் போர்டு பகுதிகளில், துாய்மை பணி நடந்தது.
இதை ஒருங்கிணைப்பாளரும் கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளருமான அஸ்லம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துாய்மை பணியை கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது: 'கிளீன் கிருஷ்ணகிரி' சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில், துாய்மை பணி நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை இப்பணி நடப்பதால், தொய்வு ஏற்படுவதாக தெரிவித்தனர். அதனால், கட்டிகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள துாய்மை காவலர்கள், 35 பேருடன் 'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பின், 20 பேரும் சேர்ந்து, தினமும் பணிகளை செய்ய உள்ளனர்.
இப்பணியில் கூடுதலாக ஈடுபடும், 20 பேருக்கு, மாதந்தோறும், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, தன்னார்வலர்கள் மற்றும் 'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பினரும் சேர்ந்து, துாய்மை பணியில் ஈடுபடுவர். அனைவரும் பெயரளவிற்கு பணி செய்யாமல், மனதளவில் நிறைவாக துாய்மை பணியை செய்ய வேண்டும்.
இப்பகுதியில் குப்பையை மீண்டும் கொட்டக்கூடாது. குப்பை கொட்டுவோரை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்ராஜன், கிழக்கு நகர செயலாளர் வேலுமணி கவுன்சிலர்கள் சீனிவாசன், பாலாஜி, ஹேமாவதி பரந்தாமன், மற்றும் கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பினர்,
தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.