/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால நிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கால நிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 23, 2024 09:44 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கோவிந்தாபுரம் அருகே சுற்றுலாதனமாக விளங்கும் அங்குத்தி சுனையில், வனத்துறை சார்பில், திருப்பத்துார் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவு படி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வனச்சரக அலுவலர் ரமேஷ் இயற்கை வனத்தை பற்றியும் மற்றும் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இதில், மன்னகம் தொண்டு நிறுவன நிறுவனர் சுரேந்தர், மரங்கள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் நன்மை, நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமை குறித்து கலைநிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து இயற்கையோடு வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் சார்ந்து வாழ்வது குறித்து, மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், கைப்பைகள் வழங்கப்பட்டது. வனவர் கிருஷ்ணமூர்தி, வனக்காப்பாளர் சிவக்குமார், முருகன், பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

