/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் 36 இடங்களில் விரைவில் முதல்வர் மருந்தகம்
/
மாவட்டத்தில் 36 இடங்களில் விரைவில் முதல்வர் மருந்தகம்
மாவட்டத்தில் 36 இடங்களில் விரைவில் முதல்வர் மருந்தகம்
மாவட்டத்தில் 36 இடங்களில் விரைவில் முதல்வர் மருந்தகம்
ADDED : பிப் 16, 2025 03:15 AM
ஈரோடு: மக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மாநில அளவில், 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், 22 இடங்களிலும், தனி நபர்கள் மூலம், 14 இடங்களிலும் துவங்கப்-பட உள்ளது. இதன்படி ஈரோடு, கோபி, புன்செய் புளியம்பட்டி, பவானி, பெருந்துறை, சத்தி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, காஞ்-சிகோவில், நசியனுார், அரியப்பம்பாளையம் என, 36 இடங்-களில் துவங்க உள்ளது. முதல்வரால் துவக்கி வைக்க உள்ள நசி-யனுார் கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்படும் மருந்தக பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க, கலெக்டர் யோசனை தெரிவித்தார்.