sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

/

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'

'கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு'


ADDED : மார் 17, 2025 03:42 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட தலைவர் ஈஸ்வரபாபு தலைமையில், கிருஷ்ண-கிரி மாவட்டம் ஓசூரில், நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழ்நாடு உயர்நிலை, மேல்

நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கையை ஆதரித்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் பங்கேற்று ஆத-ரவு அளித்தார். ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவ-தாக ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார். முதல்வராக ஸ்டாலின் பத-வியேற்று நான்காண்டுகள் ஆகிவிட்டன. முதல்வரிடம் எட்டு முறையும், அமைச்சர் குழுவிடம் நான்கு முறையும் பேச்சு-வார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் முதல்வர் மவுனம் காக்கிறார். இதனால் ஆசிரியர், அரசு ஊழியர் கொந்தளித்துள்ளனர்.இந்த பட்ஜெட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை, ஒட்டு மொத்தமாக ஏமாற்றியது, அரசின் மீது கோபத்தையும், வெறுப்-பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜாக்டோ ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும், 6 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர் பங்-கேற்கும் உண்ணாவிரத போராட்டம் வரும், 23ல் நடக்கிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபையில் அறிவித்தால் போராட்ட பாதையை மாற்றுவோம். இல்லாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us