/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.ஜி.,புதுார் அரசு நாற்று பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
/
பி.ஜி.,புதுார் அரசு நாற்று பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
பி.ஜி.,புதுார் அரசு நாற்று பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
பி.ஜி.,புதுார் அரசு நாற்று பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
ADDED : அக் 18, 2024 02:59 AM
பி.ஜி.,புதுார் அரசு நாற்று பண்ணையில்
தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
கிருஷ்ணகிரி, அக். 18-
பி.ஜி.,புதுார் அரசு தென்னை நாற்று பண்ணையில், தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து, கிருஷ்ணகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பி.ஜி.,புதுார் அரசு தென்னை நாற்றுப் பண்ணை, வேளாண் துறை கட்டுப்பாட்டிலிருந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தென்னை ஒட்டு சேர்ப்பு மையத்தில், அரசம்பட்டி நெட்டை மற்றும் சவுகாட் ஆரஞ்ச் குட்டை தாய்மரங்கள் பராமரிக்கப்பட்டு, ஒட்டு சேர்ப்பு பணிகள் நடக்கிறது. நெட்டை மற்றும் குட்டை ஒட்டு ரகங்கள் விரைவில் பூ பூக்கும் தன்மை, வீரிய வளர்ச்சி, அதிக மகசூல், அதிக எடை, தரமான கொப்பரைகள் மற்றும் அதிக எண்ணெய் கொடுக்கக்
கூடியது.
பி.ஜி.,புதுார் அரசு மாநில தென்னை நாற்று பண்ணையில், குட்டை ஒட்டு ரக தென்னங்கன்று ஒன்று, 125 ரூபாய் மற்றும் நெட்டை ரக தென்னங்கன்று ஒன்று, 65 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள், மாநில தென்னை நாற்று பண்ணை, பண்ணை மேலாளரை, 96009 66970 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரை, 95666 96864 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.