ADDED : ஜன 30, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சரவணசுந்தர் நேற்று ஓசூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஜூஜூவாடி சோதனைச்சாவடிக்கு சென்ற அவர் அங்கு, 'சிசிடிவி'க்கள் முறையாக இயங்குகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்வது குறித்தும், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். ஓசூர் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் 'தால்' நிறுவனத்திற்கு சொந்தமான விமான ஓடுதளம் உள்ளிட்டவையும் பார்வையிட்டு சென்றார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.
