/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மே 2வது வாரத்தில் மாங்கனி கண்காட்சிவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

ADDED : ஏப் 26, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், மே இரண்டாவது வாரத்தில் மாங்கனி கண்காட்சி நடக்கும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விபரம்:
விவசாயி சிவாகிருஷ்ணன்: அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், சூளகிரி ஒன்றியங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
கலெக்டர் தினேஷ் குமார்: பழங்குடி, பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் குடியிருந்து வருபவர்கள் இலவச வீட்டுமனை பெற, மே 2 முதல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
செந்தில்குமார் அத்திப்பள்ளம்: மாம்பழங்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.