ADDED : செப் 24, 2026 01:37 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டெங்கு, எலிக்காய்ச்சல், உண்ணி காய்ச்சல் போன்றவை பரவுவதை கட்டுப்படுத்த, இரு வாரம் மாபெரும் துாய்மை பணி பிரசாரம் துவங்கப்படுவதாக, நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளா-கத்தில், இருவார கால துாய்மை பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜூ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலு-வலர் ராஜேஷ்குமார், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சண்முகம், பி.டி.ஓ.,க்கள் ராஜேஷ், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், தாய்-மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை பார்வை-யிட்டார்.
