/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண் கல்வியை ஊக்குவிக்க கலெக்டர் வலியுறுத்தல்

ADDED : ஜன 27, 2024 04:13 AM
கிருஷ்ணகிரி: இளம் வயது திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவிக்க கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் இட்டிக்கல்அகரம் பஞ்., அண்ணா நகர் கிராமத்தில், குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் பேசியதாவது:
பொது சுகாதாரத்துறை சார்பில், அயோடின் உப்பு பயன்படுத்துவது மற்றும் தரம் கண்டுபிடிப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இளம் வயது திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். தற்போது பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு, 6 முதல், 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண்களுக்கு உயர்கல்வி படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனால் தங்களது பெண் குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைக்க வேண்டும். கல்வி கற்றால் தான் சமுதாயத்தில் நாம் முன்னேற்றம் அடைய முடியும். இவ்வாறு பேசினார்.
பஞ்., உதவி இயக்குனர் மகாதேவன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பச்சையப்பன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.