ADDED : செப் 04, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நாயுடு தெருவை சேர்ந்தவர் மலர்விழி, 19; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது தந்தை சரவணன், 50, ராயக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த தினேஷ்ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.