ADDED : அக் 27, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவி மாயம்
ஓசூர், அக். 27-
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுஜராபுரம் அருகே கேரட்டி பாரதி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 38, விவசாயி; இவரது மகள் பேரரசி, 19. தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 23 மதியம், 2:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அஞ்செட்டி போலீசில் அவரது தந்தை புகாரில், சிவலிங்கபுரத்தை சேர்ந்த கோபாலகண்ணன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.