ADDED : செப் 13, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பில் பருத்தி புத்தர் நகரை சேர்ந்தவர், 17, வயது மாணவி. இவர் கடத்துார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் கல்லுாரிக்கு பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். வழக்கம் போல் கடந்த, 9ல் காலை கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் மாலை வீடு திரும்ப-வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
