மண் பரிசோதனையின் அவசியம் கல்லுாரி மாணவர்கள் விளக்கம்
மண் பரிசோதனையின் அவசியம் கல்லுாரி மாணவர்கள் விளக்கம்
ADDED : மே 06, 2025 01:49 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில், 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், ஊரக பட்டுப்புழுவியல் பணி அனுபவ திட்டத்தில், 2 மாத காலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டு வளர்ச்சித்
துறையில் பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சூளகிரி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில், பட்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து, செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அதை தொடர்ந்து, மண் பரிசோதனை முடிவு அட்டைகளை பட்டு விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பட்டுப்புழு விவசாயி
களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
