UPDATED : அக் 09, 2026 06:18 AM
ADDED : அக் 09, 2026 05:44 AM

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூ-ராட்சி திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, த.வெ.க., தென் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் இளை-யராஜா தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளை-காப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், வட்டார திட்ட அலுவலர் நித்யா, மேற்பார்வை-யாளர்கள் முருகம்மாள், கல்பனா, மலர்விழி, சமூக நலத்துறை காந்திமதி ஆகி யோர் முன்-னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்-பட்ட, 34 பஞ்., ல், உள்ள, 100 கர்ப்பிணிகளுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மூலம், நலங்கு வைத்து சீர்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், த.வெ.க.,வை சேர்ந்த, மாவட்ட இணை செயலாளர் தாமோதரன், பொருளாளர் மணி-கண்டன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
