/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாரச்சந்தையில் ரசீது வழங்காமல்சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்
/
வாரச்சந்தையில் ரசீது வழங்காமல்சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்
வாரச்சந்தையில் ரசீது வழங்காமல்சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்
வாரச்சந்தையில் ரசீது வழங்காமல்சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார்
ADDED : மே 08, 2025 12:57 AM
அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது.இங்கு, 2025-26ம் ஆண்டிற்கான நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலத்தொகையாக, கடந்தாண்டு ஏலம் போன தொகையான, 12 லட்சம் ரூபாய் மற்றும், 10 சதவீத கூடுதல் தொகை, ஜி.எஸ்.டி., என மொத்தம், 16.25 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மார்ச், 12ல் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள் யாரும் அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏலம் கேட்கவில்லை. தொடர்ந்து, ஏலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மார்ச்., 25ல் நடந்தது. அதில், 20 பேர் பங்கேற்ற நிலையில், அன்றைய ஏலத்திலும் அரசு நிர்ணயித்த தொகைக்கு யாரும் ஏலம் கேட்காததால், மறு தேதி குறிப்பிடப்படாமல், ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம், புதன்சந்தையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் காய்கறி, இறைச்சி, மளிகை, விவசாய கருவிகள் விற்பனை உள்ளிட்ட கடைகளுக்கு முறையாக ரசீது வழங்காமல் பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்துள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.