நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த எச்.ஈச்சம்பாடியிலுள்ள தனியார் திருமண மண்ட-பத்தில், தென்பெண்ணையாறு நீர்பாசன விவசாயிகள் குழு
ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தலைவராக சொக்-கலிங்கம், செயலாளராக சேகர், பொருளாளராக திருமூர்த்தி,
ஒருங்-கிணைப்பாளர்களாக வெங்கடேசன், ராமமூர்த்தி, துணை தலைவ-ராக அன்பழகன், துணை செயலாளராக மாதேஸ்வரி
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மழைக்காலங்களில் தென்-பெண்ணையாற்றில் செல்லும் உபரிநீரை நீரேற்று திட்டம்
மூலம், ஏரி, குளங்களில் நிரப்ப வலியுறுத்தி, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் மூலம், நீர்வளத்துறை
அமைச்-சரை சந்தித்து மனு அளிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.

