ADDED : டிச 11, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்., கண்டன
ஆர்ப்பாட்டம்
ஓசூர், டிச. 11-
மணிப்பூரில் கலவரங்களை அடக்க தவறிய மற்றும் கலவரக்காரர்களை கைது செய்யாத, பா.ஜ., தலைமையிலான அம்மாநில அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூர் காந்தி சிலை அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநகர தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர், பா.ஜ., அரசை கண்டித்தும், பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், கோஷங்களை
எழுப்பினர்.