தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மே 16, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ஹரிஷ்பாபு தலைமை வகித்தார். மாநகர தலைவர் தியாக

ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ., இயக்குனர் பிர-வீன்சூட் பதவி காலத்தை ஓராண்டிற்கு மத்திய பா.ஜ., அரசு நீட்டிப்பு செய்து, எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கட்சியினர் கோஷம் எழுப்பினர். சிறுபான்மை பிரிவு நிர்வாகி மைஜா அக்பர், மாவட்ட பொருளாளர் மகா-தேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ரகு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். நகர தலைவர் லலித் ஆண்டனி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, ஆறுமுக சுப்பிரமணி, விநாயகம், டாக்டர் தகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜ்குமார், வேல் ஆகியோர் பேசினர். ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us